நான் விரும்பியபோதெல்லாம்
எனக்காக கவிதை எழுதி
விரும்பாதபோதும்
எனக்காக Notes எழுதி
கவிதை என்றதும்
என் பெயர் எழுதி
உன் உயிர் தீரும் வரையில்
எனக்காகவும்..
சில நேரங்களில்
பிறருக்காகவும்
ஆறாவது விரலாய்
இணைந்தாய்...
சிலநேரங்களில் உன்னை
தூக்கி எறிந்திருக்கிறேன்
பலநேரங்களில் உன்னை
அலட்சியப்படுத்திருக்கிறேன்..
இருந்தும் என்னை ஒருபோதும்
நிராகரித்ததில்லை நீ !!
இப்போது என் PENஆக
வாழும் நீ
அடுத்த ஜென்மத்தில்
என் பெண்ணாக வா!



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home