Saturday, 29 October 2011



உனக்கான என் தேடலில் 
என்னை தொலைத்தேன்..
நீ திரும்பி வரும் நாளுக்காய்
காத்திருந்து என் விழி 
வேர்த்திருந்தேன்..
நீ என்னுடன் இல்லாத நாள்கள்.....
நாள்களா.. அவை....?
ஓவொன்றும் ஒரு யுகம்..
ஒவ்வொரு யுகமும் ஸ்தம்பித்திருந்தேன்..
உண்டேன்.. உறங்கினேன்.. 
சிரித்தேன்.. எல்லம் செய்தேன்.
ஆனால் உயிர்ப்பு இல்லாமல்..
அம்மாவை போல் 
அன்பாய் எழுப்ப 
எந்த அலாரத்திற்கும் தெரியவில்லை,
அவசரமா கிளம்பும்போது ,
"இது மட்டும்.. இது மட்டும்.."
என ஊட்டி விட 
என் கைகளுக்கு தெரியவில்லை..
அங்கொன்றும் இங்கொன்றுமாய்  
சிதறி கிடக்கும் என் செருப்பு கூட
 உணர்கிறது உன் பிரிவை 

(அம்மா ஊருக்கு போயிருந்தப்ப  எழுதியது.. )

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home